தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரத்ததான நிகழ்வு

0
212

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் சபையின் ஆயுட்கால அங்கத்தவரும் முன்னால் இராஜாங்க அமைச்சருமான   ஜீவன் தொண்டமான்  ஏற்பாட்டில்,  அமரர் சௌமியமூர்த்தி தொண்டமாமானின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டும், இலங்கை பொலிஸ் தினைக்களத்தின் 156வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் இன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் ஹட்டன் உதவி பொலிஸ் கண்கானிப்பாளர்  பிரியந்த விக்ரமநாயக்க, தலைமை காவல் கண்கானிப்பாளர் ரஞ்சித் ஜெயனே, நுவரெலியா இரத்த வங்கி பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் D.S.T.செனவிரத்ன, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நிர்வாக பிரிவின் பணிப்பாளர்  P.சக்தியவேலு, அபிவிருத்தி பிரிவின் பிரதி பணிப்பாளர்  J.தியாகராஜா, முகாமையாளர்  V.ஜீவானந்தராஜா, ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் வதிவிட முகாமையாளர்  விஜேசிங், நோர்வூட் விளையாட்டு அரங்கின் வதிவிட முகாமையாளர்  கெப்ரியல் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here