தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய கூட்டம் ஒன்று இன்று டிக்கோயா என்பீல்ட் “தாயகம்” கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமை தாங்கினார்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான .எம்.
உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன், மகளிரணி தலைவி திருமதி சரஸ்வதி சிவகுரு, தொழிலாளர் தேசிய முன்னணியின் உபதலைவர் எம்.ராம்,நிருவாகப்பணிப்பாளர் ஏ.நந்தகுமார்,பிரதிப் பொதுச் செயலாளர் ப.கல்யாணகுமார்,இளைஞரணி தலைவர் சிவநேசன், இளைஞரணி செயலாளர் பொ.சதீஸ்,உபதலைவர்களான சிவானந்தன்,அ.ராஜமாணிக்கம்,வைலட்மேரி,உப செயலாளர்களான சிவகுமார்,பிரதி தேசிய அமைப்பாளர்களான கல்யாண குமார், பிரசாத், தொழிலாளர் தேசிய முன்னணியின் உபதலைவர் மலர்வாசகம் உட்பட பணிமனை உத்தியோகஸ்தர்களும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் மாவட்ட தலைவர்களும் இளைஞரணி மற்றும் மகளிரணி செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது இளைஞர் அணி பிரதித் தலைவராக செல்வா, கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர்களின் ஒருவராக லங்கேஸ்,, பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் பிரத்தியேக செயலாளராக சண்.பிரபாகரன் ஆகியோருக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.