தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மாபெரும் நடமாடும் சேவை பதுளையில்

0
259

நவீன தொழில் நுட்பம், புதிய கைத்தொழில் உலகம் மற்றும் டிஜிட்டல் மயமாக் கலுடன் தொடர்புடைய காலத்திற்கேற்றவாறான “ஸ்மார்ட் திறமைசாலிகளை உருவாக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடைமுறைப்ப டுத்தும் தேசிய வேலைத்திட்டமான “ஜயகமு ஸ்ரீ லங்கா” மக்கள் நடமாடும் சேவை மே 31 மற்றும் ஜூன் 1 ம் திகதிகளில் பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ மக்கள் நடமாடும் சேவையானது இன்றுவரை பல்வேறு மாவட்டடங்களில் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதன் பிரதிபளிப்பானது நாட்டில் தொழில் தேடுவோர் மற்றும் இந்நடமாடும் சேவை மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து இணை நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து நடத்தும் இந்நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன;

குறிப்பாக :
உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
வெளிநாட்டு தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பெறுதல்,
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளல்,
தொழில் வங்கியில் பதிவு செய்தல்,
வெளிநாடு செல்வதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்,
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு /சம்பளம் /காப்புறுதி தொடர்பான சேவைகள் சிரம வசன நித்தியத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், EPF/ETF தொடர்பான சேவைகள் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கான பதிவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, மீண்டும் வெளிநாட்டு செல்ல முடியாதுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு சுயதொழிலுக்கான நிதி உதவித்திட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு கௌவரம் வழங்கும் “ஹரசர” திட்டம், தொழில்முறை கௌரவத்திற்கு “கருசருத்” திட்டம், புதியதாக சிந்திக்கும் இளைஞர்களுக்கு “SMART YOUTH CLUB” ஸ்மார்ட்  வகுப்பறைகளை நிறுவும் நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்டுகள் கையளித்தல், ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற பல சேவைகள் எனவே இதனால் பதுளை மாவட்ட மக்கள் வெகுவாகப் பயனடையாவர்கள் .

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் கலந்து சிறப்பிக்க உள்ளன. எனவே, கொழும்பு பிரதான காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகள் சிலவற்றை இப்பகுதி மக்கள் இந்த நடமாடும் சேவையின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here