தோட்டத்தில் வதிவாளர் என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் திலகர்

0
151

வாக்காளர் ஒருவருக்கு அடையாள அட்டை இல்லாத விடுத்து அவரது வதிவிடத்தை உறுதி செய்து தற்காலிக அடையாள அட்டை உதவி தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பிரஜை அந்த வீட்டில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் அதிகாரம் தோட்ட அதிகாரிக்கும் உண்டு என தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய கலந்துரையாடல் கூட்டத்திலே தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுயாதீன மலையக ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா குறித்த குடியிருப்பில் வாழும் குறித்த பிரஜை அந்த முகவரியில் வாழ்கிறார் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு கிராம அதிகாரிக்கே உண்டு. காலம் காலமாக தோட்ட அதிகாரிகளினால் இதனை உறுதிப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டு வருவதனால் தான் அவர்கள் அடையாள அட்டையைப் பெற முடியாதுள்ளனர்.

எனவே தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவரின் தொழில் சார்ந்த அதிகாரம் தோட்ட அதிகாரிக்கு உண்டே தவிர, தோட்டத்தில் வதியும் அதிகாரியை தவிர அந்த தோட்டத்தில் வதியும் தொழிலாளியோ அல்லது தொழிலாளி அல்லாத ஒருவரோ அவர் வாக்காளராக இருந்தால் அதனை உறுதி செய்ய வேண்டியது கிராம அதிகாரியே அன்றி தோட்ட அதிகாரி அல்ல.

ஏனெனில் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்களும் தோட்டத்தில் வசிக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களாக இருந்தாலும் கூட அவரது வேலை விடயம் சம்பந்தமாக தோட்ட அதிகாரி ஏதேனும் உறுதிப்படுத்தல் செய்யலாமே தவிர இவர் இந்த தோட்டத்தின் வதிவாளர் என்பதையோ வாக்காளர் என்பதையோ உறுதி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பு கிராம அதிகாரிக்கே உண்டு என்கின்ற நிலையில் , அந்த வதிவாளரை உறுதி செய்யும் பணியை கிராம சேவை அதிகாரிகள் வசமே ஒப்படைக்குமாறும் தோட்ட அதிகாரிகளுக்கு அதனை வழங்காது இருக்குமாறு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு விடம் கோரியதுடன் தேர்தல் ஆணைக்குழு இந்த அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு கொடுப்பதை தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று ( 09.09.2024) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுயாதீன வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் கோரிக்கையையை ஏற்றுக்கொண்ட சுயாதீனக் ஆணைக்குழு தாங்கள் கலந்து பேசி இதற்கு உரிய தீர்வினை பெற்று தருவதாக தன்னிடம் பகிரங்கமாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here