தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.
கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் பெற்றனர்.
அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
‘பயனுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம், தமிழர் தேசிய பிரச்சினைகள், தேசிய அரசாங்கம்,தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்ந்த தமிழர் விவகாரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள் ஆகியவை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டன’ என மனோ கணேசன் எம்பியின் டுவீட்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது.