விமானத்தில் நடுவானில், விமானி அசந்து தூங்கியதால் பயணிகள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்திய சம்பவமொன்று இடம்டபெற்றுள்ளது.
இத்தாலிக்குச் சென்று கொண்டிருந்த விமானத்திலேயே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நியூயோர்க்கில் இருந்து ரோம் நோக்கி வந்துகொண்டிருந்த பிரான்ஸ் மீது பறந்துகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அதிகார்கள் விமானத்தை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும், விமானியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. தீவிரவாதிகள் விமானத்தை கடத்திவிட்டார்களோ என பதறிப்போன அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்.
கடத்தல் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள் 10 நிமிடங்கள் சிக்னல் ஏன் நின்று போனது என்ற விசாரிக்கும் போது, உபகரணங்களில் கோளாறுகள் ஏற்பட்டதால், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று விமானி கூறினார்.
ஆனால் தீவிர விசாரணைக்கு பின் நடுவானில் விமானி உறங்கிய அதிர்ச்சி உண்மையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நடுவானில் ஆட்டோபைலட் வசதியில் விமானம் இயங்கிக் கொண்டிருந்தபோது, விமானி தூங்கியுள்ளார். இதன் விளைவாகவே தகவல் தொடர்பு முடக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.