நத்தார் பண்டிகையை முன்னிட்டு, தமது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு விலைகளை குறைத்துள்ளதாக, சதொச நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோருக்கு இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென, சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
- பெரிய வெங்காயம்: ரூ. 5 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 185
- பருப்பு: ரூ. 7 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.378
- டின் மீன்: (உள்ளூர்) ரூ. 10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 480
- செத்தல் மிளகாய்: ரூ. 15 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 1,780
- நெத்தலி கருவாடு: ரூ. 50 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 1,100