நமநாதர் சித்தரின் ஆசியுடன் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார் திருமுருகன்

0
20
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பாபாராளுமன்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்   நேரடி வேட்பாளராக போட்டியிடும் சதானந்தன் திருமுருகன் அவரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை (17) ஆரம்பித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க கெட்டபுலா குயின்ஸ்பேரி  தோட்டத்தில் அமைந்துள்ள நமநாதர் சித்தர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்து கொண்ட அவர் அங்கு மக்கள் மத்தியில் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்தார்.
இதன்போது நமநாதர் சித்தரின் ஜீவ சமாதி,சிவ தரிசனம் மற்றும் முருகப் பெருமானுக்கும் பூசைகள் நடத்தப்பட்டது.இப்பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட அவருக்கு ஆலய நிர்வாக சபையினர் மற்றும்  குயின்ஸ்பேரி தோட்ட மக்களினால் பொண்ணாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டு வெற்றி ஆசி வழங்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் மத்தியில் முதலாவது தேர்தல் பிரச்சார உரையை ஆற்றிய அவர் நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட நாட்டில் ஏழு மாவட்டங்களில் வாழும் மலையக மக்கள் வாழ்வியல் மாற்றத்திற்கு கல்வியே சக்தியாக அமையும் எனவே கல்வி அபிவிருத்திக்கு நான் அயராது உழைக்க தயாராக உள்ளேன் என்றார்.
அத்துடன் கல்வி கற்கும் மலையக பெருந்தோட்ட மாணவர்களின் ஒவ்வொறு வீட்டிலும் ஒரு பட்டத்தாரியை உருவாக்க இலக்கை கொண்டுள்ள அதேவேளை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல அரசியல் அதிகாரம் எனக்கு தேவைப்படுகிறது அந்த அதிகாரத்தை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள குயின்ஸ்பேரி தோட்ட மக்கள் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட மக்கள் தந்துதவ வேண்டும் என தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here