நவம்பர் 2 இல் கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை

0
263

அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here