நவம்பர் 27 இல் அரச சாஹித்ய விழா

0
15

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம்இ இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழு ஒண்றிணைந்து ஏற்பாடு செய்யும் அரச இலக்கிய விருது வழஙகல் விழா -2024 இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

இவ் விருது வழங்கல் நிகழ்வு இம் மாதம் 2024   27 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகையில் புத்தசாசனஇ சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி இ அழைப்பின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இலங்கை இலக்கியத்துறைக்கு தமது உன்னத படைப்புகளால் ஊட்டமளித்த எழுத்தாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.

இதன்போது சிங்களஇ தமிழ்இ ஆங்கில மொழிகளில் 2023 ஆம் முதல் பதிப்பாக வெளிவந்த சுய நாவல், சுய சிறுகதை, சுய கவிதைப் படைப்பு, சுய இளையோர் இலக்கிய படைப்பு, சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடகம், சுய அறிவியல் புனைகதை, சிறுவர் இலக்கிய படைப்பு, சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்புஇ நானாவித விடய நூல்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு கவிதை படைப்பு, மொழிபெயர்ப்பு நாடகம், மொழிபெயர்ப்பு புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு ஆகிய பிரிவுகளுக்கான சிறந்த படைப்புக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கு ஆற்றிய உன்னத சேவை நிமித்தம் 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்தியரத்னா எனும் தேசத்தின் உயர் அரச விருது தமிழ் மொழியில் பிரபல இலக்கிய படைப்பாளி திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை, சிங்கள மொழியில் தகைச்சார் பேராசிரியர் ஜினதாச தனன சூரிய அவர்களுக்கும் ஆங்கில மொழியில் பேராசிரியர் வோல்டர் பெரேரா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here