நாட்டில் தற்போது நிலவும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரிவுகளில் மண்சரிவு அபாயம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் குறித்த பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த அபாய மாவட்டங்களில் வசிப்பவர்கள் மலைகள், சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்டிட ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.