நாடளாவிய ரீதியில் 300 எரிபொருள் நிலையங்கள் பூட்டு

0
279

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொருளாதார நிலைமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதற்கு மற்றுமொரு காரணம் என சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வாவும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் குறித்து கருத்து தெரிவித்தார்.

ஒரு தொகையை வைப்பு செய்த பின்னர் எரிபொருளை முன்பதிவு செய்யும் புதிய முறை தான் தாமதத்திற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here