நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர் இலங்கை எந்தவொரு நாட்டிலும் கடன் பெறவில்லை

0
150

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நேற்று[ 05 ] நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையில் தெரிவித்தார்.

“நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர் . எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் ” என அமைச்சர் கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாடு நல்லதா கெட்டதா என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடு சென்று பணம் அனுப்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த குழந்தைகளை நேசிப்பதால் ஆறுதல் மற்றும் சோறு கொடுக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டங்களை மாற்றி நல்லவர்களாக மாற்ற முயற்சிக்கிறோம். எமது பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய போது, ராஜபக்ஷக்கள் திருடுவார்கள் அனுப்ப வேண்டாம் என JVP யினர் கூறினார்கள் .

ஆனால் அப்பெற்றோர்கள் அதை நம்பாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் நாட்டின் மீதுள்ள அன்பினால் 12 பில்லியன் டொலர்ககளை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனால்தான் இந்நாட்டு மக்கள் மீண்டும் உணவும் பானமும் பெற முடிந்தது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும் எதிர்க்கப்பட்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது, மொனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வந்து ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கப்படவில்லை. அந்த பல்கலைக்கழகம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது இன்று அது மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது, இது பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயை ஈட்டுகிறது. JPV யின் செயற்பாடுகள் இவ்வாறு தொடர்ந்தால் இந்த நாட்டைகட்டியெழுப்ப முடியாது ஆகவே ஜனாதிபதி அவர்கள் உரையாற்றுகையில், “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற சுலோகத்துடன் ஆரம்பித்தார். அரசியலில் எவ்வகையான சவால்கள் காணப்பட்டாலும் என்னில் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். தற்போதைய அமைச்சரவை இந்த சவாலை கையில் எடுத்துக் கொண்டது. அரச அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுனர்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டனர். நாட்டின் தலையெழுத்தையே இந்த சவால் மாற்றியமைத்தது. அரச அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் காரணமாக மிகக் குறுகிய இரண்டு வருட காலப்பகுதியில் எல்லையில்லாத, வரையறுக்கப்படாத பல சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க நாம் என்னிலிருந்து ஆரம்பிக்க முன்வர வேண்டும். மாத்தறையில் உள்ள அனைவரையும் என்னுடன் கைகோர்க்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். இலங்கையை வெற்றி கொள்வோம் என்ற கோசம் வெறுமனே கனவல்ல. இதுதான் நாட்டின் வெற்றி. என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here