இங்கு வாத்திய இசைக் குழுக்களின் திறன்களையும் கண்டுகொள்ள முடிந்தது. பெரஹெரா என்பது எமது நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சமாகும். வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான கலாசார உலாவை காண முடியாது. நடன அம்சங்கள், கலாச்சார அம்சங்களுடன் பெரஹெரா என்னும் கலையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுச்செல்ல அரசாங்கம் அர்ப்பணிக்கும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தலதா பெருமானின் ஆசி கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பாரிய கலாச்சார உற்சவமாக கருத்தப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி தலதா மாளிகை வருடாந்த எசல பெரஹெரா இன்று மாலை சுப நேரத்திலே வீதி உலாவை ஆரம்பித்தது.
பொதுமக்கள், வௌிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கில் உற்சவத்தை கண்டுகளித்தனர். அந்த மக்களோடு பெரஹெராவை கண்டுகளிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்டியது என்றும் குறிப்பிட்டார்.