நானுஓயா டெஸ்போட் பிரதேசத்தில் சுமார் 20 வீடுகளை கொண்ட லயன் தொகுதியில் ஒரு மதத்திற்கு மேலாக முறிந்த நிலையில் மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன .
இது தொடர்பாக நுவரெலியா மின்சார சபை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போது அசமந்த போக்காக பதில் கூறுவதாகவும் , எரிபொருள் இல்லை எனவும் பதில் கூறுவதாகவும் இதற்கு மின்சார சபை ஊழியர்கள் சாய்ந்து இருந்த மின் கம்பத்தினை நிமிர்த்தி ஏணி மரத்தினையும் கட்டி வைத்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றன.
இந்த லயன் பகுதியில் 24 மணி நேரமும் கிராம மக்கள் மற்றும் வாகனங்கள் இவ்வழியாக அதிக அளவில் செல்கின்றன அதிக மழை , காற்று வீசும் நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், மின்சார சபை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட மின் கம்பங்கள், தற்போது முற்றிலுமாக பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருக்கின்றன
சேதமடைந்த அந்த மின் கம்பம் தற்போது வரை சீரமைக்கப்படாமல் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
நானுஓயா நிருபர்