சிறுவனொருவன் தாக்கப்படும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்படுள்ளனர்.
இன்று (05) அதிகாலை புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சமூக ஊடகங்களில் வைரலான காணொளியின் பின்னரே குறித்த தாக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த விசாரணை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 37, 46 வயதான இரண்டு பெண்கள் மற்றும் 45 வயதான ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நான்கரை வயதான குறித்த சிறுவன் தற்போது பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.