சஜித் பிரேமதாஸவுக்கும் தனக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மறுப்பு வெளியிட்டுள்ளார்.
ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஆர். மாரசிங்க இது தொடர்பில் தெரிவித்தள்ள கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், நாமல் தனது ஓ கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை எனவும் குறித்த விடயம் முற்றிலும் பொய்யானது எனவும், அவரைச் சந்திக்க தனக்கு எந்தவொரு தேவையும் இல்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயமொன்று நடந்ததாக தெரிவிக்கும் முன்னர், தன்னுடன் அல்லது தனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஊடகங்களிடம் கேட்டுக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.