உலக மக்கள் தொகை நாளை 15 ஆம் திகதி 08 பில்லியனை எட்டும் நாளாகக் கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. ஐ.நா.வின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 அறிக்கையில் இந்த கணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சும் போக்கில் இந்தியா உள்ளது என்பதையும் காட்டுகிறது.
2030 இல் உலக மக்கள்தொகை 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் உயரக்கூடும் என்று அண்மைய ஐநா கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2080 களில் மக்கள் தொகை 10.4 பில்லியன் என்ற உச்சத்தை எட்டும் என்றும் 2100 வரை உலக சனத்தொகை அந்த அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், உலக மக்கள்தொகை தினத்துடன் இணைந்து திங்களன்று வெளியிடப்பட்ட வருடாந்த உலக மக்கள்தொகை வாய்ப்பு அறிக்கை, 1950 ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள்தொகை அதன் மெதுவான விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், 2020 இல் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறது.
கருவுறுதல், சமீபத்திய தசாப்தங்களில் பல நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஒரு நாட்டில் அல்லது பகுதியில் வாழ்கின்றனர்.
கொவிட்-19 தொற்றுநோய் மக்கள்தொகை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021 இல் உலகளாவிய ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது (2019 இல் 72.9 இல் இருந்து). மேலும் சில நாடுகளில், தொற்றுநோயின் தொடர்ச்சியான அலைகள் குறுகிய கால கர்ப்பம் மற்றும் பிறப்புகளின் எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.