கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகளை நாளை (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி எசல பெரஹர நாளைய தினம் முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த காலப் பகுதியில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி நகர எல்லைக்குள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது