நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக 2321 ரூபா வழங்கவேண்டுமாம்- ஆய்வறிக்கையில் தகவல்

0
135
வாழ்வதற்கான சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 2321 தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் 2005 ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றது.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், 2018 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நிலவவும் வாழ்க்கைச் செலவினைக் கருத்திற் கொண்டு நான்கு உறுப்பினர்களை கொண்ட
தோட்டத் தொழிலாளார் குடும்பம் ஒரு நாளுக்கு வாழ்வதற்கான சம்பளத் தொகையினை கொண்டிருக்க வேண்டும்.
என்பதனை விஞ்ஞான பூர்வாக ஆய்வினை பொருளாதாரத்துறை பேராசிரியரான எஸ்.விஜேசந்திரனை ஊடாக சில மாதங்களுக்கு முன் பெருந்தோட்ட பகுதிகளில் ஆய்வினை நடாத்தியது.
இந்த ஆய்வின் முடிவின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு வாழ்வதற்கான சம்பளமாக ரூபா 2,321 வழங்கப்பட் வேண்டும்.திட்ட தெளிவாக வெளிவந்துள்ளது.
அதேவேளை ஒவ்வொரு நாளும் எமது நாட்டில் விலைவாசி அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது வழங்கப்படுகின்ற சம்பளமும். எதிர்காலத்தில் 1700 ரூபா போதுமானதாக இல்லை. அரசாங்கம் பெருந்தோட்ட மக்கள் வாழ்வதற்கான சம்பளத்தை வழங்க வேண்டுமென அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வெளியீட்டு வைக்கும் நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் 30 அன்று கண்டியில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் P முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்          எஸ். விஜயசந்திரன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
துவாரக்ஷான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here