நாவலப்பிட்டி கெட்டபுலா கடியலென தோட்டப் பகுதியில் இருந்து கெட்டபுலா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறயொன்று வீதியை விட்டு விலகி தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரேக் செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து கொத்மலை நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கடியலென ஆற்றுப்பகுதியில் இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட பொழுது சில தேயிலை கொழுந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் சில கொழுந்துகள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.