நாவலப்பிட்டி பகுதியில் பொறியில் சிக்கி 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாவலப்பிட்டி- வெஸ்டோல் தோட்டத்தின் நிடலன்டிஸ் பிரிவிலேயே குறித்த சிறுத்தைக் குட்டி உயிரிழந்ததாகவும் தேயிலைத் தோட்டத்திற்கு வரும் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியே குறித்த சிறுத்தை குட்டி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை உயிரிழந்தமை தொடர்பில் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் உடற் கூறுகள் பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.