வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவியும் உயிரிழந்துள்ள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும், 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வருட மாணவியான இவர், விடுமுறையில் தனது சொந்த ஊரான நாவலப்பிட்டிக்கு வந்துவிட்டு நேற்று இரவு அங்கிருந்து திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.