சிங்கபூரில் தற்காலிகமாக தங்கியிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையில் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா இன்று தெரிவித்தார்.
இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இதுவொரு தற்காலிக தங்குமிடம் மாத்திரமே, இங்கு இருந்துக்கொண்டு அவருக்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை.
மேலும் இது அவருக்கு புகலிடம் கோருவதற்காக ஒரு நாட்டைக் கண்டறிய உதவும் என்று அவர் குறிப்பிட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.