மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையி னால், நோர்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று (27) அதிகாலை முதல் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய மோசமான வானிலையுடன், நோட்டன் பிரிட்ஜ் பகுதியிலும் அடர்ந்த பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது, மேலும் நோட்டன் பிரிட்ஜ் பொலீசார் வாகன ஓட்டிகளுக்கு முன் முகப்பு விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்துகின்றனர்.