நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், 1 கிலோகிராம் நாட்டு அரிசியின் விலை 220ரூபாவாகவும் சம்பா அரிசி 1 கிலோகிராம் 230 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா அரிசி 1 கிலோகிராம் 260 ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை தவிர்த்து அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் 12 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உள்ளூர் சந்தையில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.