நிவ் ‘டைனிங் டொட்ஸ்’ ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

0
207

கந்தப்பளையில் இயங்கும் நிவ் ‘டைனிங் டொட்ஸ்’ ஆரம்ப பாடசாலையில் பயிலும் சிறார்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை சர்மிளா வரவேற்ப்பு மண்டபத்தில் அதிபர் திரேஸா நெட்டோ தலைமையில் இடம்பெற்றது.

கந்தப்பளை, இராகலை, ஹைபொரஸ்ட் பிரதேச ஆரம்ப பாடசாலைகளின் சிறார்கள் இதில் கலந்து கொண்டு; கௌரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில் அதிதிகளான கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன்,மத குருக்களும் கலந்து கொண்டு சிறார்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து கௌரவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here