நீதிமன்றத்தில் ஆஜரானார் டயானா

0
165

கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானாகமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்

அவர் தனது சட்டத்தரணிகளுடன் இணைந்து கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தேடுதலுக்கு பயந்து தலைமறைவாகியதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதில் வழங்கவே டயானா கமகே நீதிமன்றில் முன்னிலையானார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here