நாடு வங்குரோத்து அடைய காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
எனினும், இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பிரதிவாதியாக பெயரிட்ட உயர் நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பித்தது.
கோட்டாபய ராஜபக்ஸ இறுதியாக வசித்து வந்த முகவரிக்கு அறிவித்தலை அனுப்புமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.