கண்டி நீதிமன்ற வளாகத்தில் பரவிய வெடிகுண்டு பீதி காரணமாக, இன்று காலை 9.40 மணி முதல் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களுடன் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள், அவசரகால ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உட்பட அனைத்து பிரிவுகளும் அங்கு வரவழைக்கப்பட்டன.
இதேவேளை, நீதிபதிகளின் ஏகோபித்த தீர்ப்பின் பிரகாரம் இன்று அழைக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் திகதி மாற்றம் செய்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.