நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி நில்வளா கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மாத்தறைஇ பிடபெத்தர பகுதியில் இடம் பெற்றுள்ளது.
காணாமல் போன மனுஷ்க யோஹான் என்பவரின் காதலியான கம்புருபிட்டிய, மீபாவிட்ட, ரன்சகொட பிரதேசத்தில் வசித்து வந்த அஷானி ஹன்சிகா என்ற 19 வயது யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாத்தறைஇ பிடபெத்தர, நில்வலா கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்களை கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் (27) கண்டுபிடித்தனர்.எனினும் காணாமல் போன மனுஷ்க யோஹான் என்ற இளைஞரை தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றது.