தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன அதிவேக வீதி நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால், சிறிய வாகனங்கள் அதிவேக வீதிக்குள் பிரவேசிக்க முடியாது, லொறிகள் மாத்திரமே நீரில் பயணிக்க முடியும் எனவும், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களும் வெலிப்பன்ன இன்டர்சேஞ்சிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.