நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் பாரிய சேதம்

0
200

நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.குறித்த அனர்த்தம் நேற்று இரவு (22) புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.

நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றன இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் அதிகமான வீடுகளில் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகரங்கள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளது.

அத்துடன் இன்றும் (23) தொடர்ச்சியாக கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதியில் பல பிரதான வீதியோரங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பதாதைகளும் பெயர்ப்பலகைகளும் உடைந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன.

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் நுவரெலியா மத்திய பொது சந்தைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த பகுதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது எனவே ஹட்டன் நுவரெலியா ,வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here