உரியமுறையில் டீசல் வழங்குமாறு கோரி நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது
தற்போது தனியார் பேருந்துகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் வழங்கம் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய நுவரெலியாவில் இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பேருந்துகளுக்கு 4000 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க வேண்டிய டீசலை 2500 ரூபாய்க்கு மாத்திரம் வழங்குவதாக தெரிவித்தும் மிகுதியான 1500 ரூபாய்க்கான டீசலினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கோரி தனியார் பேருந்து சாரதிகள் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் போக்குவரத்திற்கு அனுமதிக்காது, தனியார் பஸ் சாரதிகள் இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் போக்குவரத்திற்கு அனுமதிக்காது, தனியார் பஸ் சாரதிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணித்தியாலங்ளின் பின்னர் நுவரெலியா பொலிஸாரின் தலையீட்டால் உரிய முறையில் டீசல் பெற்று தருவதாக கூறியதன் பின்னர் பகிஷ்கரிப்பினை கைவிட்டு வழமை போல் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
செ.திவாகரன்