நுவரெலியாவில்  பேருந்து விபத்து! ஒருவர் பலி 

0
278
அம்பாறையில் இருந்து  நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுல் வீதியினை கடக்க முட்பட்ட பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய   பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றன .
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\
செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here