நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு

0
203

நுவரெலியா சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடங்களுக்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரும் சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையம் ஒன்றும் சுற்றிவளைத்துள்ளனர்.

நுவரெலியா விமானப்படை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இப் பிரதேசத்தில் பல தடவைகள் சிகிச்சை பெற்ற ஒருவரை பயன்படுத்தியே குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்தகத்திற்கு எதிராக நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுடன் இணைந்து மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டு குற்றம் இழைத்தவருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கந்தபளை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் இவர் போலி முத்திரைக உள்ளிட்ட பல போலி ஆவணங்களை பயன்படுத்தி
மிக நுட்பமாக வியாபார உத்தியுடன் மருத்துவ நிலையத்தினை நடத்தி வந்துள்ளார்.

மேலும் தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமுமின்றி இயங்கிவந்துள்ளமை இணங்காணப்பட்டதுடன் முறையான கல்வித்தகமையோ, தொழில் தகைமையோ இல்லாத குறித்த நபர் இதற்கு முன்னர் நுவரெலியா மற்றும் கந்தபளை பிரதான நகரங்களில் தனியார் மருந்தகங்களிலும் சில நாட்கள் வைத்தியர் ஒருவரின் கீழ் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here