நுவரெலியா நகரசபையின் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமொன்றின் திடீர் பரிசோதனையினை மேற்கொண்டனர் .
இதன் போது மனித பாவனைக்கு உதவாத வர்த்தக நிலையத்தில்
உள்ள மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 800 கிலோ எடையுள்ள உணவுப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக பரிசோதகர்கள் தெருவித்தனர்
இதன் போது நுவரெலியா மாநகரசபையின் மாநகர சுகாதார பணிமனை அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களின் தரம்,விலை,திகதி போன்றவை பரிசோதிக்கப்பட்டதுடன், மனித பாவனைக்கு உதவாத, கலாவதியான ( பிஸ்கட்டுகள் , போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள் , டின் மீன் ,நூடில்ஸ் ,மிளகாய் என பல உணவுப் பொருட்கள் காலாவதியான நிலையில், எலி மலம், சிறுநீருடன் கலந்த பெறுமதியான மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு வர்த்தக நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பலசரக்கு கடை உரிமையாளரை நீதிமன்றத்தில் ” ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றைய தினம் (21) வியாழக்கிழமை நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் மூலம் முப்பது ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு , மனித பாவனைக்கு உதவாத பொருட்களை உடனடியாக அழிக்கப்பட வேண்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது .
டி.சந்ரு செ.திவாகரன்