பெண்கள் உரிமை தொடர்பாகவும் , திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக (08) இடம்பெற்றது.
இந்த வீதி நாடகத்தை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பெண்கள் உடலியல், உளவியல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள், பெண்கள் எவ்வாறான சாதனைகளை புரிந்துள்ளார்கள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எவ்வாறு என்பன உள்ளிட்ட பல விழிப்புணர்வு விடயங்கள் இவ்வீதி நாடகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது மேலும் குறித்த நிகழ்வில் அதிகமான
திருநங்கைகளும் இணைந்து கொண்டு
“சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளின் வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் , எங்களை புறந்தள்ளாதீர்கள் சமூகத்தில் எங்களை அங்கிகரியுங்கள் மற்றும் எங்கள் உரிமைகளை பாதுகாருங்கள் எனவும் தெரிவித்து பொது மக்களுக்கு தெளிவூட்டும் பதாகைகளை காட்சிப்படுத்தி குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.
இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் எமது சமூகமாக விளங்குகிறார்கள் இவர்களை இந்திய வம்சாவளியினர் என்று தெரிவிப்பதை விடுத்து இலங்கைத் தமிழர் அல்லது மலையக தமிழர் என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நானுஓயா நிருபர்