நுவரெலியா இலங்கை வங்கிக் கிளையில் 83 ஆவது ஆண்டு விழா

0
318
இலங்கை வங்கி தனது 83 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு நுவரெலியா கிளையின் முகாமையாளர் எம்.ராமன் தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது சர்வமத பிராத்தனைகள் நடைபெற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் விவசாய மற்றும் வீடமைப்பு கடன் உதவிகள் பயனாளிகள் சிலருக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நுவரெலியா இலங்கை வங்கி கிளையின் முகாமையாளர் எம்.ராமன், அதன் பகுதி முகாமையாளர் பி.விஸ்வநாதன், நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத், நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய, நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் மற்றும் நுவரெலியா இலங்கை வங்கி கிளையின் உத்தியோகத்தர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.
தலவாக்கலை  பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here