நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் 90 வது பொதுக்கூட்டம் நுவரெலியா கூட்டுறவு விடுதியில் (28) இடம்பெற்றது.
இப் பொது கூட்டத்தில் இலங்கை விளையாட்டு துறை அமைச்சின் உறுப்பினர்களும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் நிர்வாகப் பிரிவினர்கள் உட்பட நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் 2024 ஆம் ஆண்டு அங்கம் வகிக்கும் 27 அணிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்குபற்றினர்.
இதன்போது நடப்பு வருடத்திற்கான நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக சபையினர்கள் இலங்கை விளையாட்டு துறை அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகப் பிரிவினர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டது.
அந்தவகையில் ,
புதிய நிர்வாக சபை தலைவராக எம். எஸ் லாபீர் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக எஸ்.சாந்தனும், பொருளாளராக டீ.அருள்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் உப தலைவர்களாக …
ஜே. புகனேந்திரன், எஸ். புவேந்திரன், ஏ.டேவிட், வி. எஸ் கார்த்திக், கே.பிரதீபன், ஆகியோரும் உப செயலாளர்களாக பி.சிந்துஜன், எஸ். நிஷாந்தன் ஆகியோரும், உப பொருளாளராக எம்.எம் அணாப் தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஸ்டீபன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.