நுவரெலியா குதிரை பந்தைய திடலுக்கு சொந்தமான 84 ஏக்கர் காணியில் பல்வேறு தரப்பினர் சில இடங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அனுமதியற்ற கட்டடங்களை கட்டியுள்ளனர்.
என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் (விளையாட்டு உட்கட்டமைப்பு) டபிள்யூ. குலசூரிய தெரிவித்தார்.
நுவரெலியா குதிரை பந்தைய திடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுகததாச தேசிய விளையாட்டு அரங்கு அதிகாரசபையின் தலைவர் ரசித் விக்கிரமசிங்க உட்பட விளையாட்டு அமைச்சின் ஆறு அதிகாரிகள் (05) காலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சுக்கு குதிரைப்பந்தைய திடல் காணிகள் மற்றும் சொத்துக்களை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் டப்ளியூ. குலசூரிய, இதுவரையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்த அரசாங்கத்திற்கு சொந்தமான நுவரெலியா குதிரைப்பந்தைய திடல் காணிகளில் குடியிருப்பு தேவைக்காக பல்வேறு தரப்பினரால் சில இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
என தெரிவித்த அவர் இந்த விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நுவரெலியாவுக்கு உல்லாச பயணத்துறையை மேற்கொள்வோர் விரும்பத்தக்கவாறு இங்கு வெற்றிகரமான அபிவிருத்தியை முன்னெடுக்க ஒரு வளர்ச்சி திட்ட முன்மொழிவை முன்வைப்பதற்காக அவதானிப்பு செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்.