நுவரெலியா பிரதான நகருக்கு கடந்த வியாழக்கிழமைக்கு (14) பின்னர் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில் இருந்தவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது .
விற்பனை முகவர் இன்றைய தினம் கூப்பன் முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்ததன் பின்னர் கூப்பன் இன்றி வரிசையில் காத்திருந்தவர்களுக்கும் விற்பனை முகவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது
எனினும் இதன்போது நுவரெலியா பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த்துடன் கடந்த வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்து இறுதியில் கிடைக்காத 20 நபர்களுக்கும் ஏனையவை கூப்பன் முறையில் விநியோகம் செய்யப்படும் என அறிவித்து பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தனர்.