நுவரெலியா நகர பகுதிகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இன்று சனிக்கிழமை (16 ) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள சிபட்கோ எரிபொருள் நிலையத்தில் அனுமதி பெற்ற சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது
நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்று செல்கின்றன இதன் போது சுமார் பத்து நாட்களுக்கு மேலாக எரிபொருளுக்காக நுவரெலியா – உடபுசல்லாவ வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களும் , எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது
இதன் போது நுவரெலியா பொலிஸாரின் தலையீட்டின் மூலம் சுகாதார ஊழியர்களின் 10 வாகனத்துக்கும் வரிசையில் இருந்த ஒரு வாகனத்திற்கும் எரிபொருள் வழங்கி வருகின்றன.
நானு ஓயா நிருபர்