நுவரெலியா -தலவாக்கலை-ஹட்டன் வீதியில் தொடரும் பணிபகிஷ்கரிப்பு- பயணிகள் அவதி

0
240

கடந்த (30) ஆம் திகதி மாலை பணிப்பகிஷ்கரிப்பு பயணிகள் பாதிப்பு இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

நுவரெலியா தலவாக்கலை பஸ் சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பின்னர் அன்றிரவு இனந்தெரியாத நபர்களால் நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துக்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகளை தாக்குதல் நடத்தி உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று காலை முதல் தினம் நுவரெலியா தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன இதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் தனியார் பேருந்து ஊழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்வாறு நேற்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் இணைந்து சேவையில் ஈடுபட்ட நுவரெலியா – ஹட்டன் சொகுசு பேருந்துகளுக்கும் அதில் பயணம் செய்த பயணிகளுக்கும் லிந்துலை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் நடுவீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அராஜகமாக செயல்பட்டதாக தெரிவித்து இன்றைய தினம் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here