நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மத்திய மாகாண உள்ளூராட்சி சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகியவை இணைந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட எட்டு மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட கடைகள் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ,முன்னால் மத்திய மாகாண பை உறுப்பினர் எஸ்.பி.ரத்நாயக்கா, மாகாண உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் யூ.பி.ஹேரத் ,டப்ளியூ.பி.விஜயவர்தன உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
ஆ.ரமேஸ்.