நுவரெலியா மரக்கறி விலையில் மாற்றம்

0
143
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பணை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் (29.05.2024) இன்றைய நாளுக்குறிய விலை பட்டியலை இந்த நிலையத்தின் காரியாலயம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற
முட்டை கோஸ் 70-90 ரூபாய்,
கரட் 125-145 ரூபாய்,
லீக்ஸ் 270-290 ரூபாய்,
ராபு 80-100 ரூபாய்,
இலையுடன் பீட்ரூட் 220-240 ரூபாய்,
இலையில்லா பீட்ரூட் 320-340 ரூபாய்,உருளை கிழங்கு 290-310 ரூபாய், உருளை கிழங்கு சிவப்பு 270-290 ரூபாய்,நோக்கோல் 100-120 ரூபாய் என மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பாவிக்கப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 1800-1900 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேபோல ஐஸ்பேர்க் 1400-1500 ரூபாய், சலாது 1100-1200 ரூபாய்,
புரக்கோலின் 1000-1100 ரூபாய்,கோலிப்புளவர் 1000-1100 ரூபாய் என ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக விலையில் கொள்வனவு மற்றும் விற்பணை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here