நுவரெலியா மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் ஆறாவது அத்தியாயத்தின் இருநூற்றி பதினோறாவது பிரிவின் பிரகாரம் நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன ( ஐக்கிய தேசிய கட்சி) 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (15) வியாழக்கிழமை மாநகரசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்பித்தார்.
இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மாநகர முதல்வரின் வாக்கு உட்பட 12 வாக்குககளும், பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களுமாக 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
பொது ஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த மாநகரசபை எதிகட்சி தலைவரும் முன்னாள் மாநகர முதல்வருமான மஹிந்த தொடம்பே கமகே வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ள வில்லை. 23 உறுப்பினர்களை கொண்ட நுவரெலியா மாநகரசபையில் 20 உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துக் கொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி கே. விவேகாணந்தன்,பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த திருமதி சிவரஞ்சனி மற்றும் அதேகட்சியை சேர்ந்த இந்திக்க முனவீரவும் இந்த வரவு செலவு கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
வரவு செலவு திட்டத்தை சபைக்கு சமர்பித்த நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன உறையார்றுகையில், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் நூற்றி பண்ணிரெண்டு கோடியே நாற்பது இலச்சத்து நாற்பத்து மூவாயிரத்து முன்நூறு (1,124,043,300) ரூபாய் மீண்டுவரும் வருமானம் மூலமும்,நாற்பத்து மூன்று கோடியே பத்து இலட்சம
( 431,000,000) ரூபாய் மூலதான வருமானம் மூலமும் மொத்தமாக நூற்றி ஐம்பத்தைந்து கோடியே ஐம்பது இலட்சத்து நாற்பத்து மூவாயிரத்து முன்நூறு (1,555,043,300) ரூபாய் மொத்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவதற்கு எதிர்பார்க்கின்றேன்.
அந்த எதிர்பார்க்கப்பட்ட வருமானம் மூலம் எதிர்வரும் ஆண்டிற்காக அறுபத்து இரண்டு கோடியே அறுபத்தெட்டு இலட்சத்து அறுபத்தொராயிரத்து அறுநூறு (626,861,600) ரூபாய் மீண்டும்வரும் செலவு மற்றும் தொண்ணூற்று இரண்டு கோடியே என்பத்தொரு இலட்சத்து நாற்பத்தாரா யிரத்து நாநூறு (928,146,400) ரூபாய் மூலதனச் செலவு ஆகியவற்றுடன் மொத்தமாக நூற்றி ஐம்பத்தைந்து கோடியே ஐம்பது இலட்சத்து எட்டாயிரம் ( 1,555,008,000) ரூபாய் தொகையை செலவு செய்வதற்கு நான் எதிர்பார்க்கிறேன்.
எதிர்வரும் ஆண்டில் மொத்த செயற்பாட்டு செயற்றிட்டங்கள் மூலம் முப்பத்தையாயிரத்து முன்நூறு( 35,300) ரூபாய் மிகையை நோக்கி அண்மிப்பதற்கு எதிர்பார்த்து எதிர்வரும் ஆண்டிற்கான எனது வரவுத்திட்ட முன் மொழிவை சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
இலங்கையின் மிகவும் ரம்யமான சுற்றாடல் நேய பசுமை நகரை அமைத்து ஆசியாவிலேயே மிகச் சிறந்த மாநகரசபையாக நிறுவும் நோக்குடன் அதற்குறிய பலம் மற்றும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்ட 2023 ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை இன்று நான் சமர்ப்பித்துள்ளேன்.எனவே இந்த வரவு செலவுதிட்டத்தை சமர்பிக்க உதவிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். என கூறினார்.
இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வருமான மஹிந்த தொடம்பேகமகே உறையாற்றுகையில், இன்று இங்கு சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை.
வரவுசெலவு திட்டம் சமர்பிக்க முன்னரே வீடுகள், வர்த்தக நிலைங்களின் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த வரவு செலவு திட்டத்திலாவது வரி சுமைகள் குறையுமென பொது மக்களும் நானும் எதிர்பார்த்தேன்.ஆனால் அவ்வாறு நடைபெற வில்லை.
பத்து நாட்களுக்கு மழை பெய்யாவிட்டால் குடிப்பதற்கு நீர் இருக்காது. இந்த குடிநீரை தட்டுபாடின்றி வழங்குவதற்கு எந்தவித திட்டமும் இந்த வரவு செலவு திட்டத்தில் எதுவும் குறிப்பிடபடவில்லை. எனவே இந்தவரவுசெலவு திட்டத்தில் பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாத வரவு செலவு திட்டத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
எனவே இந்த வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பில் நான் கலந்துக்கொள்ளாமல் விலகி நிற்கின்றேன். என கூறி அவர் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
நூரளை ரமணன்