நுவரெலியா – லபுக்கலையில் 30 பேர் பயணித்த பஸ் விபத்து

0
532

நுவரெலியாவில் இருந்து லபுக்கலைக்குச் சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் மாத்திரம் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருவதுடன், வேக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமையினாலே சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எஸ்.கிரிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here