நோர்வூட் – சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலய வகுப்றைக்கு தீ

0
349

ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் 11ஆவது வகுப்பறைக்குள் தீ வைத்தமைக்கு பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

க.பொ.தராதர சாதாரணதர பரீட்சைக்காக மூடப்பட்ட சகல அரசாங்க பாடசாலைகளினதும் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், இந்த பணி பகிஷ்கரிப்பும் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மே மாதம் 26ஆம் திகதி இரவு குறித்த பாடசாலையின் 11ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த சிலர், மதுபானம் அருந்திவிட்டு வகுப்பறைக்கு தீ வைத்துள்ளனர். அவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்ட அந்த அலுமாரியில் இருந்த மாணவர்களின் தனிப்பட்ட தரவுகள் பல தீயில் கருகியுள்ளதுடன் பாடசாலையின் யன்னல் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.

எனினும் இது தொடர்பில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, அதிபர் மற்றும் ஆசியர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த பாடசாலை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அதிபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில், முறையிடுவதற்கு ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் ஆர்.சத்தியேந்திராவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

பொகவந்தலாவை சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here