நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 47வது வருடாந்த பரிசளிப்பு விழா இன்று

0
319

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 47வது வருடாந்த பரிசளிப்பு விழா 05.07.2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது.

பாடசாலையின் அதிபர் பி.முத்துலிங்கம் தலைமையில் நடைபெற உள்ள இந்த 47வது வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர்.ரமேஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.
2023ஆம் ஆண்டு கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்ட மாணவ மாணவியர் பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ள இவ் பரிசளிப்பு விழாவில் சுமார் 400 மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here